RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78517990
கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவிக்கிறது

கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவிக்கிறது

ஏப்ரல் 01, 2020

கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான மேலும் சில நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவிக்கிறது

1. ஏற்றுமதி வருமானத்தின் கைவரப்பெறுதல் கால நீட்டிப்பு

தற்போதுள்ள நிலைப்படி, ஏற்றுமதியாளர்கள் செய்யும் ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு அல்லது மென்பொருள் ஏற்றுமதிகள், ஏற்றுமதி செய்த நாளில் இருந்து 9 மாதங்களுக்குள் முழுமயாக கைவரப்பெற்று அந்த நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். கோவிட் -19 காரணமாக ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதி வருமானங்களை கைவரப்பெறுவதற்கும் திருப்பி அனுப்புவதற்குமானக் காலம், ஏற்றுமதி செய்யப்பட்ட நாளில் இருந்து 15 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஏற்றுமதியாளர்கள் தங்கள் வரவுகளை, முக்கியமாக கோவிட்-19 பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் கைவரப்பெறவும் மற்றும் அவர்கள் எதிர்காலத்தில் வெளிநாட்டில் உள்ள கொள்முதல் செய்பவர்களுடன் ஏற்றுமதி ஒப்பந்தங்களைக் கலந்தாலோசிக்கவும் உதவும்.

2. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிவகைக் கடன் வரம்பை மதிப்பாய்வு செய்தல்

ரிசர்வ் வங்கி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிவகைக் கடன் வரம்பை மதிப்பாய்வு செய்வதற்காக ஒரு ஆலோசனைக் குழுவை (தலைவர்: திரு சுதிர் ஷ்ரிவாஸ்தவா) நியமித்திருந்தது. ஆலோசனை குழுவின் இறுதிப் பரிந்துரைகள் இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் ஏற்படும் சூழ்நிலையை மாநிலங்கள் சமாளிக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வழிவகைக் கடன் வரம்பை தற்போதுள்ள வரம்பில் இருந்து 30% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பாய்வு செய்யப்பட்ட வரம்புகள் ஏப்ரல் 01,2020 முதல் செயல்பாட்டுக்கு வந்து செப்டெம்பர் 30, 2020 வரை நடைமுறையில் இருக்கும்.

3. கவுண்ட்டர் சைக்க்ளிக்கள் கேபிட்டல் பஃப்பர் முறையை செயல்படுத்துதல்

கவுண்ட்டர் சைக்க்ளிக்கள் கேபிட்டல் பஃப்பர் (சி.சிஒய்.பி) முறைக்கான கட்டமைப்பு ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 05, 2015 தேதியிட்ட வழிகாட்டுதல்களின் படி அமைக்கப்பெற்று, சூழ்நிலைகளுக்கேற்ப சி.சிஒய்.பி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதற்கான முடிவு முன்னரே அறிவிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கட்டமைப்பு, சில இணைக் காட்டிகளுடன் கிரெடிட்டிற்க்கும் ஜி‌டிபிக்குமான இடைவெளியை முக்கியக் காட்டியாக பயன்படுத்துவதாக சொல்கிறது. மதிப்பாய்வு மற்றும் சி.சிஒய்.பி காட்டிகளின் அனுபவப் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, சி.சிஒய்.பி –யை, தேவைக்கேற்ப, ஒரு வருடம் அல்லது அதற்கு குறைவானக் காலத்திற்கு பயனபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

யோகேஷ் தயால்      
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2167

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?