ரூபாய் நோட்டுக்களை எண்ணுவதற்கு / ஆய்வு செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
செப்டம்பர் 10, 2017 ரூபாய் நோட்டுக்களை எண்ணுவதற்கு / ஆய்வு செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி SBN நேட்டுக்களை எண்ணுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் விண்ணப்பத்திற்கு அளித்த பதிலை மேற்கோள் காட்டி, செய்தி ஊடகத்தின் ஒரு பிரிவில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. SBN உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்களின் மெய்மைத்தன்மையையும், எண்ணிக்கையையும் சோதித்தறிய இந்திய ரிசர்வ் வங்கி அதிநவீன CVPS இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. இவை ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்களைவிட மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை. எண்ணும் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு ஷிப்டுகளாக இயந்திரங்களை இயக்கி உபயோகிக்கிறது. மேலும் வர்த்தக வங்கிகளிலிருந்து தற்காலிகமாக ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்களைப் பெற்று தேவையான மாற்றங்களைச் செய்து உபயோகிக்கிறது. மேலும் நோட்டு எண்ணும் திறனை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி பிற வழிவகைகளையும் ஆய்வு செய்கிறது. (ஜோஸ் J. கட்டூர்) பத்திரிகை வெளியீடு – 2017-2018/685 |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: